வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Updated : சனி, 25 மார்ச் 2017 (18:23 IST)

குற்றவாளியை தப்பிக்கவிட்ட போலீசுக்கு காத்திருந்த அதிர்ச்சி

திருவண்ணாமலை மாவட்டத்தில் குற்ற வழக்கில் தொடர்புடையவரை தப்பிக்க உதவிய காவல்துறை ஆய்வாளர் மற்றும் தலைமை காவலர் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 


 

 
திருவண்ணாமலை மாவட்டம் வெறையூரைச் சேர்ந்த வைத்தியலிங்கம் என்பவர் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்.  இவர் தப்பிச் செல்ல காவல்துறை ஆவாளர் ரவி மற்றும் தலைமை காவலர் சீனுவாசன் உதவி செய்துள்ளனர்.
 
இதை அறிந்த வேலூர் டி.ஐ.ஜி.தமிழ்சந்திரன், வைத்தியலிங்கம் தப்பியதற்கு உதவி செய்த ஆய்வாளர் ரவி மற்றும் தலைமை காவலர் ரவி ஆகியோரை 
பணியிடை நீக்கம் செய்தார். இச்சம்பவம் அம்மாவட்ட காவல்துறையினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.