போலிஸைக் கேலி செய்து டிக்டாக் – நான்கு பேர் கைது… 2 பேருக்கு வலைவீச்சு !

Last Modified வெள்ளி, 13 செப்டம்பர் 2019 (13:54 IST)
மதுரையில் நேற்று போலிஸாரை வெட்டுவோம் குத்துவோம் என டிக்டாக் வீடியோ எடுத்த நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று இம்மானுவேல் குருபூஜை  மதுரையில் நடைபெற்றது. அப்போது பாதுகாப்பு பணிகளுக்காக அந்த பகுதியில் போலிஸார் குவிக்கப்பட்டனர். அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலிஸார் ஒருவரை கும்பலாக வந்த இளைஞர்கள் மடக்கி வெட்டுவோம் குத்துவோம் எனப் பாட்டு பாடி டிக் டாக் வீடியோ எடுத்ததாக சொல்லப்படுகிறது.

இந்த வீடியோ சமூகவலைதளங்களில் பரவவும் போலிஸார் ஒருவர் அளித்த புகாரின் படி அந்த வீடியோவில் உள்ளவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் கே.கரிசல்குளத்தை சேர்ந்த வினித் (21), சந்தோஷ்ராஜா (19 ), கள்ளிக்குடி ஒன்றியம் வேப்பங்குளத்தை சேர்ந்த மருதுசெல்வம் (20), ராமகிருஷ்னமூர்த்தி(20) என விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்னும் 2 பேரை போலிஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.இதில் மேலும் படிக்கவும் :