வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 28 ஜூன் 2023 (18:09 IST)

பெரியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா: பாமக எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு..!

periyar university
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் இன்று பட்டமளிப்பு விழா நடந்த நிலையில் இந்த விழாவில் இருந்து திடீரென பாமக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 
 
சேலம் பெரியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்ற நிலையில் இதில் தமிழக கவர்னர் ரவி கலந்து கொண்டார். இந்த விழாவில் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி கலந்துகொள்ள இருந்த நிலையில் அவர் முதலமைச்சர் உடனான ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டதால் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் பாமக எம்எல்ஏக்கள் அருள் மற்றும் சதாசிவம் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிலையில் பல்கலைக்கழகம் நிர்வாகம் தங்களுக்கு உரிய மரியாதை அளிக்கவில்லை என கூறி திடீரென வெளிநடப்பு செய்தனர். இந்த வெளிநடப்பால் சில நிமிடங்கள் பல்கலைக்கழக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
 
Edited by Mahendran