1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. PMK leaders meet to cm stalin about reservationb

முதல்வருடன் பாமக தலைவர் சந்திப்பு: இடஒதுக்கீட்டு வழக்கில் மேல்முறையீடா?

பாமக
பாமகவுக்கு வழங்கப்பட்டிருந்த 10.5 சதவீத இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதாக சமீபத்தில் மதுரை ஐகோர்ட் தீர்ப்பளித்த நிலையில் இந்த வழக்கில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என பாமக வினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி வன்னிய சமூகத்திற்கு வழங்கப்பட்ட 10.5 உள் இட ஒதுக்கீட்டை உயர்நீதிமன்றம் ரத்து செய்திருக்கும் நிலையில் பாமக தலைவர் ஜிகே மணி தலைமையில் ஏகே மூர்த்தி வழக்கறிஞர் பாலு ஆகியோர் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களை சந்தித்தனர்
 
இந்த சந்திப்பின்போது 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழக்கில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என அவர்கள் வலியுறுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை அடுத்து இன்னும் ஓரிரு நாளில் இட ஒதுக்கீடு விவகாரத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்யும் செய்வது குறித்த அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 
அடுத்த கட்டுரையில்
தங்கமகன் மாரியப்பனுக்கு அரசு வேலை: முதல்வர் ஆணை