1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 31 ஜனவரி 2024 (11:31 IST)

10 தொகுதிகள்.. 1 ராஜ்யசபா.. அன்புமணிக்கு அமைச்சர் பதவி.. பாஜகவிடம் பாமக பேரம்?

தர்மபுரி உள்பட 10 தொகுதிகள், ஒரு ராஜ்யசபா எம்பி தொகுதி மற்றும் அன்புமணிக்கு அமைச்சர் பதவி என மூன்று நிபந்தனைகளை பாஜகவிடம் பாமக வைத்துள்ளதாகவும் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது 
 
ஆனால் ஏழு தொகுதிகள் என்றும் பாஜக தலைமை கூறியுள்ளதாகவும், அதேபோல் ஒரு ராஜ்யசபா தொகுதிக்கும் ஓகே சொல்லிவிட்டதாக தெரிகிறது. ஆனால்  பாஜக  தனி பெரும் கட்சியாக ஆட்சி அமைக்கும் என்பதால் கூட்டணி கட்சிகளுக்கு அமைச்சர் பதவி கொடுக்க விரும்பவில்லை என்றும் அதனால் அன்புமணிக்கு அமைச்சர் பதவி என்பதை பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என்றும் பாஜக சார்பில் இருந்து கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது.  
 
வெறும் ராஜ்யசபா தொகுதிக்கு மட்டும் பாஜகவிடம் செல்வதற்கு பதிலாக அதை அதிமுகவே கொடுக்குமே என்றும் பாமக யோசித்து வருகிறதாம். ஆனால் தேர்தல் செலவு கணிசமாக பாஜகவில் இருந்து பணம் பெறலாம் என்ற ஆப்சன் இருக்கிறது என்பதால் பாமக, அதிமுக பக்கம் செல்லுமா? அல்லது பாஜக பக்கம் செல்லுமா? என்பது இப்போது வரை முடிவு செய்யாத நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது
 
Edited by Siva