1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : புதன், 11 ஜனவரி 2017 (16:00 IST)

தமிழர்களை மதிக்கவில்லையா மோடி? - அவமானப்பட்ட அதிமுக எம்.பி.க்கள்!

ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோருவது குறித்து மனு அளிக்கச் சென்ற அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்களை பிரதமர் நரேந்திர மோடி சந்திக்க மறுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


 

தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரியும், ஜல்லிக்கட்டு போட்டி நடத்த ஏதுவாக மத்திய அரசு அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டும் என்ற வலியுத்தவும் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று பிரதமர் மோடியை சந்திக்க டெல்லி சென்றனர்.

மேலும், மனுவை பிரதமர் மோடியிடம் நேரில் சந்தித்து கொடுக்க அதிமுக உறுப்பினர்கள் நேரம் கேட்டதாக தெரிகிறது. ஆனால் பிரதமர் மோடி தமிழக எம்.பி.களை சந்திப்பதை தவிர்த்துவிட்டார். இதனால் ஏமாற்றமடைந்த அதிமுக எம்.பிக்கள் பிரதமரின் அலுவலத்தில் அளித்தனர்.

மேலும், ஜல்லிக்கட்டு தொடர்பான அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவின் கோரிக்கை மனுவை மத்திய வனத்துறை மற்றும் சுற்றுசூழல் துறை இணை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகரிடம் அளித்துள்ளனர்.

ஜல்லிக்கட்டு தொடர்பாக தொடர்ந்து வஞ்சித்து வரும் நிலையில், தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கை மனு அளிக்கச் சென்றவர்களின் சந்திப்பை தவிர்த்த பிரதமர் மோடியின் செயலால் தமிழக ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.