1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 31 டிசம்பர் 2023 (14:35 IST)

தமிழ்நாடு வருகிறார் பிரதமர் மோடி!.. ரூ.19,850 கோடி நலத்திட்டங்கள் தொடக்கம்..!

PM Modi
பிரதமர் மோடி நாளை மறுநாள்  தமிழகம் வர இருப்பதாகவும் அவர் 19180 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்களை தொடங்கி வைக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளன
 
திருச்சி விமான நிலையம் 1100 கோடியில் கட்டி முடிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த விமான நிலையத்தை பிரதமர் மோடி திறக்க நாளை மறுநாள் தமிழ்நாடு வருகிறார். 
அதனை அடுத்து சேலம் - மேட்டூர் இடையேஎ 41 கிலோமீட்டர் தூரம் இரட்டை ரயில் பாதையை நாட்டிற்கு அர்ப்பணிக்கிறார். அது மட்டுமின்றி  திருச்சி விருதுநகர்,  விருதுநகர் தென்காசி, செங்கோட்டை திருச்செந்தூர் மின்மயமாக்க ரயில் பாதையை தொடங்கி வைக்கிறார்.  
 
மேலும் 39 கிலோமீட்டர் திருச்சி - கல்லகம் 4 வழிச்சாலையையும் அவர் திறந்து வைக்கிறார். அதுமட்டுமின்றி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவிலும் பிரதமர் மோடி கலந்து கொள்ள இருக்கிறார்.  
 
மொத்தத்தில் தமிழகத்தில் அவர் ரூ.19,850 கோடி மதிப்பில் ஆன பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க தமிழக வர இருக்கும் நிலையில் அவரை வரவேற்க தமிழக பாஜகவினர் தயாராகி வருகின்றனர்.  அவருடன் பல்வேறு நிகழ்ச்சிகளில் முதல்வர் முக ஸ்டாலின் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva