திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 20 மே 2024 (15:36 IST)

ஈரான் அதிபர் இறப்பிற்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை: இஸ்ரேல் அறிவிப்பு!

ஈரான் அதிபர் இறப்புக்கும் எங்களுக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை என்று இஸ்ரேல் அறிவித்துள்ளது.

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி என்பவர் நிகழ்ச்சி ஒன்றிற்கு ஹெலிகாப்டரில் சென்று கொண்டிருந்தபோது அவர் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி அவர் உயிரிழந்தார். இந்த விபத்தில் ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் உள்பட சில அதிகாரிகளும் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில் இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போரில் இஸ்ரேலுக்கு  எதிரான ஹிஸ்புல்லா அமைப்புக்கு ஈரான் ஆதரிப்பாக ஆதரிப்பதாக குற்றச்சாட்டுகள் இருந்த நிலையில் ஈரான் அதிபரின் மறைவு இஸ்ரேல் மீது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் ஈரான் அதிபர் ஹெலிகாப்டர் விபத்துக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது. ஈரான் அதிபரின் மறைவு குறித்து அமெரிக்கா உள்பட பல நாடுகள் இதுவரை கருத்து தெரிவிக்காத நிலையில் இஸ்ரேல் கருத்து தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Siva