நாளை தமிழகம் வரவுள்ள நிலையில் தமிழில் டுவிட் போட்ட பிரதமர் மோடி!

modi
நாளை தமிழகம் வரவுள்ள நிலையில் தமிழில் டுவிட் போட்ட பிரதமர் மோடி!
siva| Last Updated: புதன், 24 பிப்ரவரி 2021 (21:46 IST)
தமிழகத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் வரவிருப்பதால் தேசிய தலைவர்கள் அவ்வப்போது தமிழகத்திற்கு வருகை தந்து கொண்டிருக்கின்றனர். ஏற்கனவே அமித்ஷா, பிரதமர் மோடி, ராகுல் காந்தி உள்பட பல தேசிய கட்சி தலைவர்கள் தமிழகம் வந்துள்ள நிலையில் நாளை பிரதமர் மோடி மீண்டும் தமிழகம் வர இருக்கிறார்
அவர் தமிழகத்தில் ஒரு சில நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வார் என்றும் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகளை ஈடுபடுவார் என்றும் பாஜக நிர்வாகிகளிடம் தேர்தலை சந்திப்பது குறித்த ஆலோசனைகளை வழங்குவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் நாளை தமிழகம் வரவிருக்கும் பிரதமர் மோடி சற்று முன்னர் தமிழில் ஒரு டுவிட் பதிவு செய்துள்ளார். அந்த வீட்டில் அவர் கூறியிருப்பதாவது: தேச வளர்ச்சிக்கு தமிழ் நாட்டின் பங்களிப்பு குறித்து இந்தியா பெருமை கொள்கிறது. தமிழர்களின் துடிப்பான பண்பாடு உலக அளவில் புகழ் பெற்றது. தமிழ் நாட்டின் வளர்ச்சிக்கு உழைப்பதில் மத்திய அரசு பெருமைப் படுகிறது. பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்காக நாளை கோயம்புத்தூரில் இருப்பேன்.


இதில் மேலும் படிக்கவும் :