செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 28 ஏப்ரல் 2020 (13:31 IST)

பினராயி விஜயனுக்கு எதிராக பாஜக போர்கொடி: காரணம் என்ன?

பிரதமருடனான ஆலோசனை கூட்டத்தை பினராயி விஜயன் புறக்கணித்தது சரியில்லை என பாஜக கண்டனம். 

 
கொரோனா வைரசை கட்டுப்படுத்த மத்திய அரசு மே. 3 வரை ஊரடங்கு பிறப்பித்துள்ள நிலையில் மே 3 ஆம் தேதிக்கு பின்னர் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து பிரதமர் மோடி அனைத்து மாநில முதல்வர்களுடன் நேற்று வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தினார். 
 
இந்த வீடியோ கூட்டத்தை கேரள முதல்வர் பினராயி விஜயன் புறக்கணித்தாக கூறப்பட்டது. ஆம், அவருக்கு பதில் அம்மாநில தலைமைச் செயலாளார் டாம் ஜோஸ் கலந்துக்கொண்டார். ஆலோசனை கூட்டத்தில் ஏழு மாநில முதல்வர்களே பேச வேண்டும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. 
 
அதன்படி பிகார், ஒடிசா, ஹரியானா, குஜராத், உத்தரகாண்ட், இமாசல பிரதேசம், புதுச்சேரி ஆகிய முதல்வர்கள் மட்டுமே பேசுகின்றார்கள். கேரள முதல்வரின் பெயர் இடம் பெறாததால் அவர் கலந்துகொள்ள வில்லை என சொல்லப்படுகிறது.
 
இந்நிலையில் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார் பாஜக கேரள மாநில தலைவர் கே.சுரேந்திரன். அவர் குறிப்பிட்டுள்ளதாவது, ஒட்டுமொத்த நாடும் கொரோனாவுக்கு எதிராக போராடி வரும் நிலையில் பிரதமருடனான ஆலோசனை கூட்டத்தை பினராயி விஜயன் புறக்கணித்தது சரியில்லை. இதை எப்போதும் நியாயப்படுத்த முடியாது என தெரிவித்துள்ளார்.