ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 29 மார்ச் 2023 (15:25 IST)

10ஆம் வகுப்பு பிராக்டிக்கல் தேர்வில் 1 லட்சம் மாணவர்கள் ஆப்சென்ட்.? அதிர்ச்சி தகவல்..!

Practical
பத்தாம் வகுப்பு பொது தேர்வின் பிராக்டிகல் தேர்வில் ஒரு லட்சம் மாணவர்கள் பங்கேற்கவில்லை என்ற தகவல் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் பிராக்டிகல் தேர்வில் பங்கேற்காத மாணவர்களுக்கு கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
பத்தாம் வகுப்பு பொது தேர்வு ஏப்ரல் 6ஆ  தேதி தொடங்கி 20ஆம் தேதி முடிவடைகிறது என்பதும் இந்த தேர்வுக்காக மாணவ மாணவிகள் தயார் செய்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் 10ஆம் வகுப்பு செய்முறை பொது தேர்வில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்கவில்லை என தகவல் வெளியாகி உள்ளன. பத்தாம் வகுப்பு செய்முறை பொதுத்தேர்வில் மாணவர்கள் பங்கேற்பு குறைந்ததால் பத்தாம் வகுப்பு செய்முறை பொதுத்தேர்வு எழுதும் காலஅவகாசம் மார்ச் 31 வரை நீடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 
 
பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் செய்முறை தேர்வு எழுதாத மாணவர்களை உடனடியாக தேர்வு எழுத வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
 
Edited by Siva