1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : புதன், 7 செப்டம்பர் 2016 (12:34 IST)

உண்மையான குற்றவாளியை வெளியே கொண்டு வருவேன் : திலீபன் மகேந்திரன்

சுவாதி கொலையை வைத்து மதக்கலவரம் உருவாக்க திட்டமிட்டார்கள் என்று சுவாதி கொலை வழக்கில் அதிரடி பதிவுகளை பதிவிட்ட திலீபன் மகேந்திரன் கூறியுள்ளார்.
 

 
இந்திய தேசியக் கொடியை எரித்த தந்தை பெரியார் திராவிடர் கழகத்தைச் சார்ந்த தோழர் திலிபன் மகேந்திரன், மென்பொறியாளர் சுவாதி கொலையாளிகள் குறித்த ஆதாரம், தம்மிடம் உள்ளதாக திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டார்.
 
இவர் மீது பிஜேபி பிரமுகர் கருப்பு முருகானந்தம் கொடுத்த புகாரில் திருவாரூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இதனால் இவர் மீது அவதூறு வழக்கு போடப்பட்டது.
 
இதையடுத்து திலீபன் மகேந்திரன் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் இன்று திலீபன் மகேந்திரன் ஜாமீனில் வெளிவந்தார். 
 
சிறையிலிருந்த வெளியே வந்த திலீபன் மகேந்திரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘’என்னுடைய உயிருக்கு 5 லட்சம் விலை வைத்திருந்ததாகவும், அதனால் என்னை பாதுகாக்கும் பொருட்டு, உயர் பிரிவு பாதுகாப்பில் தான் சிறை பிடித்துள்ளோம் என்று சொல்லி சிறையில் உள்ள பைத்தியங்களோடு என்னை அடைத்துவிட்டார்கள்.
 
சுவாதி கொலையில் உண்மைகளை வெளியே சொல்வதினால் ஒரு தேடப்படும் குற்றவாளி கொடுத்த புகாரின் பேரில் என்னை கைது செய்திருக்கிறார்கள். 
 
நான் சுவாதி வழக்கின் உண்மையான குற்றாவளி யார் என்பதை  கண்டிப்பாக வெளியே கொண்டு வருவேன். சுவாதி கொலையை வைத்து மதக்கலவரம் உருவாக்க திட்டமிட்டார்கள்” என்று கூறியுள்ளார்.