1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva

தமிழக மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல்: அதிர்ச்சி தகவல்

தமிழக மீனவர்கள் அவ்வப்போது இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது கடல் கொள்ளையர்களால் தாக்கப்பட்டு இருப்பதாக வெளிவந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
வேதாரண்யம் அருகே நேற்று தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது திடீரென கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியதாகவும் இதில் புஷ்பவனத்தை சேர்ந்த 3 மீனவர்கள் காயம் அடைந்து இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது
 
மேலும் கடற்கொள்ளையர்கள் தமிழக மீனவர்களை தாக்கி 200 கிலோ வரை ஜிபிஎஸ் கருவி உள்ளிட்ட ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்களை எடுத்துச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது
 
ஒரு பக்கம் இலங்கை கடற்படையினரால் தாக்குதல் இன்னொரு பக்கம் திடீரென கடற்கொள்ளையர்கள் தாக்குதல் என தமிழக மீனவர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது