1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 15 பிப்ரவரி 2024 (13:18 IST)

சில்மிஷம் பண்ண நினைச்சா.. கபர்தார்! மெட்ரோவில் ’இளஞ்சிவப்பு’ பெண்கள் படை! – சென்னை மெட்ரோ அதிரடி!

metro
சென்னை மெட்ரோ ரயில்களில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய புதிதாக “இளஞ்சிவப்பு படை” (Pink Squad) அறிமுகம் செய்யப்படுகிறது.



சென்னையில் மெட்ரோ ரயில்கள் இரண்டு வழித்தடங்களில் தற்போது இயங்கி வருகின்றன. இந்த மெட்ரோ ரயில்களில் தினசரி ஆயிரக்கணக்கானோர் பயணம் செய்து வருகின்றனர். மெட்ரோ ரயில்களில் பொதுப் பெட்டிகள் தவிர பெண்களுக்கு மட்டுமான ஒரு பெட்டியும் ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் ஆண் பயணிகள் பயணிக்கக்கூடாது என்றும் அவ்வபோது ரயிலிலேயே அறிவிப்பும் வெளியாகிறது.

எனினும் பலர் அந்த அறிவிப்புகளை பொருட்படுத்தாமல் பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட பெட்டியில் பயணிப்பதாக புகார்கள் எழுந்துள்ளது. ஆள் இல்லாத நேரங்களில் மெட்ரோ ரயிலில் சிலர் செய்யும் காரியங்கள் முகம் சுளிக்க வைப்பதாக உள்ளதாகவும் புகார்கள் எழுந்துள்ளது.


இந்நிலையில் சென்னை மெட்ரோவில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மெட்ரோ நிர்வாகம் கராத்தே பயின்ற பெண்கள் படையான “இளஞ்சிவப்பு படை”யை அறிமுகம் செய்துள்ளது. இந்த இளஞ்சிவப்பு படை பெண்கள் மெட்ரோ ரயில் மற்றும் ரயில் நிலையங்களில் இயக்க நேரங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்றும், பெண்கள் தங்களது புகார்களை இளஞ்சிவப்பு படையிடம் தெரிவிக்கலாம் என்றும் அவர்கள் உடனடி நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K