புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Modified: சனி, 22 ஆகஸ்ட் 2020 (21:04 IST)

புகைப்படத் தொழில் செய்தவர்.... ரயில் முன் பாய்ந்து தற்கொலை

சரியான வருமானம் இல்லாமல் சிரமத்துடன் வாழ்ந்து வந்த புகைப்படக் கலைஞர் ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக் கோட்டை  அருகேயுள்ள கிராமத்தில் வசித்து வந்தவர்  ஜோசப்( 36). இவருக்கு மனைவியும் இரு குழந்தைகளும் உள்ளனர்.

இவர் பேருந்து நிலையம் போட்டோ ஸ்டுடியோ நடத்தி வந்ததுள்ளார். தற்போது கொரொனா கால கட்டம் என்பதால் போதுமான வாழ்வாதாரம் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளார்.

இதனால் தனது  விலை உயர்ந்த கேமராக்களை அவர் அடகு வைத்ததாகத் தெரிகிறது.

இந்நிலையில், வீட்டிலிருந்து வெளியே சென்ற ஜோசப்,  திரும்பி வரவில்லை என குடும்பத்தினர் தேடியுள்ளனர். பின்னர் நேற்று இரவு 12: 30 மணிக்கு வந்த சரக்கு ரயில் மோதி அவர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியானது.

ஜோசப்பின் மரணம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.