கோலமாவு கோகிலா படத்தின் சிங்கிள் ட்ராக் வெளியானது
நயன்தாரா நடித்துள்ள கோலமாவு கோகிலா படத்தின் இரண்டாவது சிங்கள் ட்ராக் இன்று வெளியானது.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘கோலமாவு கோகிலா’, சுருக்கமாக ‘கோகோ’. ஹீரோயினை முன்னிலைப்படுத்திய இந்தப் படத்தில், நயன்தாரா பிரதான வேடத்தில் நடித்துள்ளார். யோகி பாபு, சரண்யா பொன்வண்ணன், அறந்தாங்கி நிஷா, ஜாக்குலின் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு, அனிருத் இசையமைத்துள்ளார்.
இந்தப் படத்தில் இருந்து ‘எதுவரையோ…’ என முதல் பாடல் ஏற்கெனவே ரிலீஸாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில், இன்று இப்படத்தின்‘ கல்யாண வயசு’ என்று தொடங்கும் சிங்கள் ட்ராக் வீடியோ பாடல் இணையதளத்தில் வெளியாகியுள்ளது. இந்தப் பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் எழுத, அனிருத் பாடியுள்ளார்.