வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 27 ஆகஸ்ட் 2021 (07:11 IST)

இன்றைய பெட்ரோல், டீசல் விலை என்ன?

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் நிலவரத்திற்கு ஏற்ப சென்னை உள்பட தமிழகம் முழுவதிலும் அவ்வப்போது பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்தும் இறங்கியும் வந்தது என்பதை ஏற்கனவே பார்த்து வந்தோம்
 
ஆனால் கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலை ஒரே விலையில் இருப்பதாக செய்திகள் வெளியானது. இந்த நிலையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவித மாற்றமும் இல்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன 
 
நேற்றைய விலையான பெட்ரோல் ஒரு லிட்டர் ரூபாய் 99.20 என்ற விலையிலும், டீசல் விலை 93.52 ரூபாய் என்ற விலையிலும் விற்பனை ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயராமல் இருப்பது பொதுமக்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது