1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 26 ஆகஸ்ட் 2021 (08:12 IST)

இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமா?

சென்னையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தினந்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வந்த நிலையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை கட்டுப்படுத்தப்பட்டதை அடுத்து சென்னையிலும் பெட்ரோல் டீசல் விலை கடந்த சில நாட்களாக குறைந்து கொண்டு வருகிறது என்பதை பார்த்தோம்
 
இந்த நிலையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் எந்தவித மாற்றமும் இல்லை என்றும் நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்படுவதாகவும் எண்ணெய் நிறுவனம் அறிவித்துள்ளது. சென்னையில் இன்று பெட்ரோல் விலை ரூபாய் 99.20 என்ற விலைக்கும் டீசல் விலை ரூபாய் 93.52 என்ற விலைக்கு விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட தமிழக பட்ஜெட்டில் பெட்ரோலுக்கான வரி ரூபாய் மூன்று குறைக்கப்பட்டதை அடுத்து தற்போது 100 ரூபாய்க்கும் குறைவான விலையில் பெட்ரோல் விலை விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தை அடுத்து நேற்று புதுவையிலும் பெட்ரோல் விலை குறைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது