1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva

சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமா?

Petrol
சென்னையில் கடந்த 100 நாட்களுக்கும் மேலாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. 
 
இதனை அடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்  102.63 எனவும் சென்னையில் இன்று ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 94.24 எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
சென்னை உள்பட இந்தியா முழுவதும் மூன்று மாதங்களுக்கும் மேலாக பெட்ரோல் டீசல் விலை உயரவில்லை என்பது பொது மக்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தாலும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால் இன்னும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டு வருகிறது
 
எனவே விரைவில் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது