திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 28 ஏப்ரல் 2022 (07:37 IST)

சென்னையில் இன்றைய பெட்ரோல் டீசல் விலை

Petrol
கடந்த 20 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயராமல் இருந்த நிலையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றமில்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன 
 
இதனை அடுத்து சென்னையில் இன்று பெட்ரோல் விலை ரூபாய் 110.85 எனவும் சென்னையில் இன்று டீசல் விலை ரூபாய் 100.94 எனவும் விற்பனையாகி வருகிறது 
இருப்பினும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறைந்து கொண்டே வருவதை அடுத்து அதற்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது 
 
இந்த நிலையில் நேற்று பிரதமர் மோடி தமிழ்நாடு உள்பட ஒரு சில மாநிலங்கள் வாட் வரியை குறைக்கவில்லை என்றும் வாட் வரியை குறைத்து அதன் பயனை பொதுமக்கள் அனுபவிக்க செயல்பட வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார் .