ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Senthil Velan
Last Updated : புதன், 1 மே 2024 (15:27 IST)

நடிகர் அஜித்துக்கு அண்ணாமலை பிறந்தநாள் வாழ்த்து.! தன்னம்பிக்கையால் உயர்ந்தவர் என புகழாரம்..!

Ajith
நடிகர் அஜித் தனது பிறந்த நாளை இன்று கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு  பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
 
தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக இருந்து வரும் நடிகர் அஜித் குமார் இன்று தனது 53வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அஜித்தின் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் கொண்டாடி மகிழ்கின்றனர். 

மேலும் நடிகர் அஜித்தின் தீனா உள்ளிட்ட பல படங்கள் தியேட்டர்களில் ரீ ரிலிஸ் செய்யப்பட்டுள்ளன. அந்த படங்களை பார்த்து ரசிகர்கள் ஆர்ப்பரித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் அஜித்குமாருக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
 
இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அண்ணாமலை, தன்னம்பிக்கையை மட்டும் துணையாகக் கொண்டு, எளிய பின்புலத்தில் இருந்து வந்து, தனது திறமையால் மக்களை கவர்ந்து, திரையுலகின் முக்கிய அடையாளங்களில் ஒருவராக உயர்நீதிருக்கும், நடிகர், சகோதரர் அஜித்குமாருக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவுக்கு அஜித் ரசிகர்கள் கமெண்ட்டில் நன்றி தெரிவித்து வருகின்றனர்.