1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 17 ஏப்ரல் 2023 (16:40 IST)

உதயநிதியை துணை முதல்வராக்க வேண்டும்: பெரம்பலூர் எம்.எல்.ஏ பேச்சு..!

உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வர் ஆகவேண்டும் என பெரம்பலூர் எம்எல்ஏ பிரபாகரன் பேசியுள்ளார்.
 
உதயநிதி ஸ்டாலின் தற்போது இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக இருந்து வரும் நிலையில் அவரை துணை முதல்வராக வேண்டும் என மானிய கோரிக்கை விவாதத்தில் பங்கேற்ற பெரம்பலூர் எம்எல்ஏ பிரபாகரன் பேசியுள்ளார் 
 
அமைச்சர் உதயநிதியின் உழைப்பு ஒரு துறையோடு நின்று விடக்கூடாது என்றும் முதலமைச்சருக்கு துணை நின்று அனைத்து துறைகளின் பணிகளையும் உதயநிதி மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். 
 
அமைச்சராக பதவி ஏற்று பலரும் பாராட்டுத்தக்க வகையில் உதயநிதி செயலாற்றி வருகிறார் என்றும் அவர் உதயநிதிக்கு புகழாரம் சூட்டினார்.
 
Edited by Mahendran