1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 23 மே 2018 (15:46 IST)

வருத்தம் தெரிவித்த ஆர்.ஜே.பாலாஜியை வருத்தெடுத்த நெட்டிசன்கள்!

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு டுவிட்டர் பக்கத்தில் வருத்தம் தெரிவித்த ஆர்.ஜே.பாலாஜியை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

 
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் தமிழகத்தை அதிரவைத்துள்ளது. போராடிய மக்கள் மீது அரசு செய்த செயலுக்கு எல்லோரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
 
இந்நிலையில் ஆர்.ஜே.பாலாஜி தனது டுவிட்டர் பக்கத்தில், தூத்துக்குடியில் நடந்தது அதிர்ச்சி அளிக்கிறது. அப்பாவி மக்கள் சுட்டு கொல்லப்பட்டது வெட்கக்கேடு. நம் சொந்தங்கள் பலியாகியுள்ளனர். அமைதியான போராட்டம் வன்முறையில் முடிந்ததை பார்க்க வருத்தமாக உள்ளது என்று பதிவிட்டுள்ளார்.
 
இவரது இந்த பதிவிற்கு பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அதில் ஒருவர், சுட்டவர்களை விட இவரை போன்ற போலி போராளிகள் மீதுதான் எங்களுக்கு கோவம் அதிகமாக வருகிறது என்று பதிவிட்டுள்ளார்.
 
சிலர், ஜல்லிக்கட்டு முதல் தூத்துக்குடி வரை நமக்கு கற்று தந்த பாடம் என்றும் இவரை போன்ற வீர வசனம் பேசும் சினிமாக்காரர்களை நம்ப கூடாது என்றும் பதிவிட்டுள்ளார்.