செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Updated : வியாழன், 2 ஜூலை 2020 (14:05 IST)

மக்கள் நேரடியாக வீடியோ காலில் கமிஷனரிடம் பேசலாம் – புதிய கமிஷனர்

சென்னை மாநகர கமிஷனராக  இருந்த ஏ..கே. விஸ்வநாதன்  நேற்றுடன் ஓய்வு பெற்ற நிலையில் சென்னை மாநகரத்தின் 107 வது  கமிஷனராக  மகேஷ்குமார் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.

அதன்பிறகு செய்தியாளர்களுக்கு கமிஷனர் மகேஷ்குமார் பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது :

சென்னை மாநகர கமிஷனராக என்னை நியமனம் செய்த முதல்வருக்கு நன்றி கூறுகிறேன். சென்னை மாநகரத்தில் மொத்தம் 20 ஆயிரம் போலீஸார் மற்றும் அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர்.

எனவே, பொதுமக்கள் தங்கள் குறைகளை வீடியோ கால் மூலமாக என்னிடம் கூறுவதற்கு ஏற்பாடுகள் செய்ய உள்ளேன். மக்கள் கமிஷனர் ஆபிஸ் வர முடியாத நிலை இருக்கும். அதனால் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒருமுறை  வீடியோ கால் மூலமாக மக்கள் குறைகளை தெரிவிக்க ஏற்பாடுகள் செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.
 
முன்னாள் கமிஷனர்  ஏ.கே.விஸ்வநாதன் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து அனைவரது வரவேற்பையும்  பெற்ற நிலையில் புதிய கமிஷனர் மீது எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.