வியாழன், 14 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 6 மார்ச் 2019 (12:47 IST)

மக்களே உஷார் ! மார்ச் மாதம் வங்கிகளுக்கான விடுமுறை நாட்கள் இதோ!!

நடைபெறும் மார்ச மாதத்தில் மஹாசிவராத்தி பண்டிகையை  முன்னிட்டு வங்கிகளுக்கு  5 நாட்கள் விடுமுறை  அறிவிக்கப்பட்டுள்ளது. மட்டுமல்லாமல் வரும் மார்ச் 20, 21 ஆகிய இரு நாட்களில் மட்டும் நாடு முழுவதும் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை ஆகும். 
இந்த மார்ச் மாதத்தில் வங்கிகளுக்கான விடுமுறை நாட்களை இப்போது காணலாம்:
நேற்று மஹா சிவராத்திரியை முன்னிட்டு நாடு முழுவதுமுள்ள வங்கிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது.
 
வரும் மார்ச்   20 ஆம் தேதி வியாழக்கிழமை ஹோலி பண்டிகையை ஒட்டி மேற்கு வங்கம், ஆந்திர பிரதேசம், ஜம்மு மற்றும் காஷ்மீர், உத்தராகண்ட் ஆகிய மாநிலங்களுக்கும், மேலும் நாடு முழவதுமுள்ள  பெருவாரியான வங்கிகளுக்கு  வண்ணமயமான ஹோலியால் மார்ச் 21 ஆம் தேதி அன்றும் விடுமுறை ஆகும்.
 
பீஹார் மாநிலத்தில் வரும் மார்ச் 22 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அம்மாநிலத்தில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறையாகும். ஆனால் மார்ச் 21 மார்ச் 23 ஆகிய தினங்களில் வங்கிகள்  மூடப்படாது. ஆனால் மார்ச 23 ஆம் தேதி 4 வது சனிக்கிழமை ஆதலால் வங்கிகளுக்கு விடுமுறை ஆகும்.
 
மேலும் பஞ்சாபில்  ஹோலியை  முன்னிட்டு வரும் மார்ச் 21 அம் தேதியும், வரும்  மார்ச் 23 ஆம் தேதி பகத் சிங் -ன் நினைவு நாளாதலால் 21, 23 ஆகிய இரு தினங்களுக்கும் அம்மாநிலத்தில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
 
அனைத்து வங்கிகளுக்கும்  இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் நாடுமுழுவதும் விடுமுறை அளிக்கப்படுகிறது. இதில் இரண்டாவது சனிக்கிழமை மார்ச் 9 ஆம் தேதியும் நான்காவது சனிக்கிழமை 23 ஆம் தேதியும் ஆகும்.