செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 10 நவம்பர் 2018 (11:45 IST)

பழ.கருப்பையா நாக்கை வைத்து வியாபாரம் செய்யும் வியாபாரி: அமைச்சர் காமராஜ்

அதிமுக, திமுக என மாறி மாறி அரசியல் செய்து வருபவர் நடிகரும் அரசியல்வாதியுமான பழ.கருப்பயா. இவர் அதிமுகவில் இருந்தபோது 'கருணாநிதி அரசியலுக்கு வாருங்கள் என்று கூப்பிட்டபோது நாட்டில் உள்ள அயோக்கியர்கள் எல்லோரும் அரசியலுக்கு வந்தனர்' என கருணாநிதியை கடுமையாக விமர்சனம் செய்தவர்

இந்த நிலையில் தற்போது திமுகவில் இருக்கும் பழ.கருப்பையா, சர்கார் படத்தில் நடித்த பின்னர் விஜய் தான் அடுத்த முதல்வர் என்ற ரீதியில் பேசி வருகிறார். இது திமுக தலைமைக்கே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியின்போது, 'அதிமுகவின் அமைச்சர்கள் அனைவருமே அயோக்கியர்கள் என்று கூறினார். இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய அமைச்சர் காமராஜ், 'பழ.கருப்பையா ஒரு வியாபாரி, நாக்கை வைத்து அவர் வியாபாரம் செய்பவர். பழ.கருப்பையா அதிமுகவில் இருந்தபோது எங்களிடமே பணம் வாங்கி கொண்டு தான் மேடையில் பேசுவார். அமைச்சர்களில் யார் நல்லவர் என பழ.கருபாபையா கேட்கிறார். நான் சொல்கிறேன் அதிமுகவின் அமைச்சர்கள் அனைவருமே யோக்கியர்கள் தான் என மார்தட்டி சொல்வேன். வேணுமென்றால் நாளை நான் நேராக வருகிறேன். இரண்டு பேரும் ஒரே இடத்தில் விவாதிக்க தயாரா என கேள்வியும் எழுப்பியுள்ளார்