1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Updated : ஞாயிறு, 9 ஜனவரி 2022 (16:55 IST)

முழு ஊரடங்கு: வாகனங்கள் கிடைக்காமல் பயணிகள் தவிப்பு!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் வாடகை ஆட்டோ, வாடகை கார்கள் கிடைக்காமல் தவித்து வருகிறார்கள். 

 
கடந்த 2020 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த ஆண்டின் முதல் முழு ஊரடங்கு இன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.  தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதை அடுத்து போலீசார் பாதுகாப்புக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். 
 
முழு பொது முடக்கம் அமலில் இருக்கும் நிலையில் இன்று விமானம், ரயில் சேவை மட்டும் இருக்கிறது. இந்த இடங்களுக்கு செல்லும் மக்கள் தங்கள் வாகனம், வாடகை வாகனத்தில் செல்ல காவல்துறை அனுமதி அளித்து இருக்கிறது. ஆனால் வெளி மாவட்டத்தில் இருந்து சென்னை எழும்பூர் ரயில் நிலையம், சென்னை செண்ட்ரல் வந்த பொதுமக்களுக்கு வாகனம் கிடைக்காமல் நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் வாடகை ஆட்டோ, வாடகை கார்கள் கிடைக்காமல் தவித்து வருகிறார்கள்.