திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 29 மே 2023 (08:08 IST)

கறிவிருந்துக்கு வந்த பெற்றோர், மகளை மறந்துவிட்டு சென்ற சம்பவம்.. தருமபுரியில் பரபரப்பு..!

கோவிலில் நடந்த கறி விருந்துக்கு வந்த பெற்றோர் மகளை மறந்து விட்டு சென்ற சம்பவம் தர்மபுரியில் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் அந்த குழந்தையை போலீசார் மீட்டு பெற்றோரிடம் சேர்த்துள்ளனர். 
 
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாப்பிரெட்டி பட்டி என்ற பகுதியில் உள்ள கோவிலில் நேற்று திருவிழா மற்றும் கறிவிருந்து நடந்தது. இந்த விருந்தில் பலர் கலந்து கொண்ட நிலையில் பெற்றோர் கறி விருந்து சாப்பிட்ட மயக்கத்தில் மகளை மறந்து விட்டு வீட்டுக்கு சென்றனர். 
 
இந்த நிலையில் அந்த பெண் குழந்தை அழுது கொண்டே இருந்த நிலையில் போலீசார் அந்த குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். சக்திவேல் ஜோதி என்ற அந்த தம்பதியினர் தாங்கள் மூன்று வயது மகளை கறி விருந்து சாப்பிட்ட மறைத்ததில் வீட்டில் விட்டுவிட்டு வந்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்த நிலையில் போலீசார் அந்த பெற்றோருக்கு அறிவுரை கூறி குழந்தையை கவனமாக பார்த்துக் கொள்ளும்படி அறிவுறுத்தினர். இதனை அடுத்து தங்கள் தவறை உணர்ந்த அந்த பெற்றோர் குழந்தையை பெற்றுக்கொண்டு போலீசாரிடம் மன்னிப்பு கோரியதாக தகவல் வெளியாகி உள்ளன.
 
Edited by Siva