திங்கள், 6 ஜனவரி 2025
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Mahendran
Last Modified: வியாழன், 25 மே 2023 (18:30 IST)

திருமணம் தாமதமாகிறதா? இந்த தட்சணாமூர்த்தியை வணங்குங்கள்..!

சுருட்ட பள்ளி என்ற பகுதியில் உள்ள பள்ளி கொண்டேஸ்வரர் ஆலயத்தின் தட்சிணாமூர்த்தியை வணங்கினால் திருமணத்தடை நீங்கும் என முன்னோர்கள் தெரிவித்துள்ளனர். 
 
ஆந்திர மாநிலத்தில் உள்ள சுருட்டபள்ளி என்ற இடத்தில் நஞ்சுண்டேஸ்வரர் கோயில் மற்றும் பள்ளி கொண்டீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோயில் மிகவும் சக்தி வாய்ந்தது என்றும் குறிப்பாக தட்சிணாமூர்த்தியை வணங்குவதற்காக ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த கோவிலில் திருமண தடை உள்ளவர்கள் வந்து வணங்கினால் உடனடியாக திருமணம் நடக்கும் என்பது ஐதீகமாக உள்ளது. இந்த கோவில் குருவின் அம்சமாக இருப்பதை அடுத்த தட்சிணாமூர்த்திக்கு மிகப்பெரிய சக்தி இருப்பதாகவும் வேறு எங்கும் காண முடியாத கோலத்தில் இந்த கோவிலில் தட்சிணாமூர்த்தி இருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran