செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 5 ஏப்ரல் 2018 (18:27 IST)

சென்னை மென்பொறியாளர் மூளைச்சாவு: உடலுறுப்பு தானத்திற்கு பெற்றோர் சம்மதம்

ஆந்திராவை சேர்ந்த பெண் மென்பொறியாளர் சென்னையில் நடந்த விபத்து ஒன்றில் மூளைச்சாவு அடைந்த நிலையில் அவரது பெற்றோர் அந்த பெண்ணின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்துள்ளனர்

மைத்ரிதேஜஸ்வேனி என்ற 27 வயது மென்பொறியாளர் நேற்று தனது சகோதரருடன் பைக்கில் செல்லும்போது விபத்தில் சிக்கினார். இந்த விபத்தில் படுகாயம் அடைந்த மைத்ரிதேஜஸ்வேனி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் மூளைச்சாவு அடைந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதனையடுத்து தனது மகளின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது பெற்றோர்கள் முன்வந்துள்ளனர்.  மைத்ரி உயிருடன் இருக்கும்போதே உடலுறுப்பு தானத்தில் ஆர்வமாக இருந்தவர் என்றும், அவரது ஆசைப்படியே உடலுறுப்பு தானம் செய்ய முடிவு செய்துள்ளதாகவும், அவரது பெற்றோர் மருத்துவர்களிடம் தெரிவித்தனர். இதனையடுத்து இன்னும் ஓரிரு நாளில் மைத்ரியின் உறுப்புகள், தானம் வேண்டி விண்ணப்பம் செய்தவர்களுக்கு பொருத்தப்படவுள்ளது