1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 21 பிப்ரவரி 2018 (11:37 IST)

சென்னையில் அம்மா ஸ்கூட்டர் பெற முதல்கட்டமாக 1400 பேர் தேர்வு

மானிய விலை ஸ்கூட்டர் பெற சென்னையில் மட்டும் 1400 பேர் முதல் கட்டமாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு ஜெயலலிதாவின் பிறந்தநாளான வரும் 24ந் தேதி முதல்வர் முன்னிலையில் வாகனம் வழங்கப்பட உள்ளது.
தமிழகத்தில் அம்மா இருசக்கர வாகன திட்டத்தின்கீழ் ரூ.25 ஆயிரம் மானியத்தில் ஸ்கூட்டர் வாங்கிக்கொள்ள கடந்த மாதம் 22-ந் தேதி விண்ணப்ப வினியோகம் தொடங்கி இந்த மாதம் 10-ந் தேதி வரை நடைபெற்றது. இருசக்கர வாகன உரிமம் பெற்றுள்ள 18 முதல் 40 வயது வரையுள்ள பெண்கள், ஆண்டு வருமானம் ரூ.2,50,000/- க்கு மிகாமல் உள்ள பெண்களுக்கு வாகனத்தின் விலையில் 50% மானியம் அல்லது ரூ.25,000 இவற்றில் எது குறைவோ அத்தொகை மானியமாக வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.  இதனால் ஓட்டுநர் உரிமம் பெற பெண்கள் வட்டாரப்போக்குவரத்து அலுவலகங்களில் குவிந்தனர். 
 
தமிழகம் முழுவதும் 3 லட்சத்து 36 ஆயிரத்து 103 பேர் விண்ணப்பித்துள்ள நிலையில் விண்ணப்பங்களை சரிபார்க்கும் பணிகள் கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது. அதில் முதற்கட்டமாக முறையான ஆவணங்களை தாக்கல் செய்த 1,400 பெண்கள் தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.