அதிமுகவின் பொதுச்செயலாளர் பண்ருட்டி ராமசந்திரன்: சசிகலா புஷ்பா விருப்பம்
ஜெயலலிதா மறைவு குறித்தும், அடுத்து அதிமுக கட்சியின் செயல்பாடுகள் குறித்தும் சசிகலா புஷ்பா பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அதில் அதிமுக பொதுச்செயலாளராக அடுத்து யாரை நியமிக்கலாம் என்றும் கூறியுள்ளார்.
ஜெயலலிதா மறைந்ததை தொடர்ந்து கட்சி நிர்வாகம் மற்றும் அதிமுகவின் பொதுச் செயலாளர் பதிவில் யார்? என்பது குறித்தும் அதிமுகவினர் மட்டுமல்லாமல் தமிழக மக்களிடையும் பெரிய எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் இன்று சசிகலா புஷ்பா, அவர் அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது:-
அதிமுக தொண்டர்களை அஞ்சலி நேரத்தில் கூட ஜெயலலிதாவை நெருங்க விடவில்லை. அவரது உடலை சுற்றி சசிகலா கூட்டம் தான் இருந்தது. ஜெயலலிதாவுக்கு மூத்த தொண்டர்களிடம் உரையாடுவது மிகவும் பிடிக்கும்.
தற்போது காலியாக உள்ள பொதுச் செயலாளர் பதவிக்கு பிஹெச் பாண்டியன், பண்ருட்டி ராமச்சந்திரன் ஆகியோரை தேர்வு செய்யலாம் என்று கூறியுள்ளார்.