1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Updated : வியாழன், 23 மார்ச் 2017 (17:33 IST)

சசி அணிக்கு ஆதரவு அளித்த ஓபிஎஸ் அணி எம்.எல்.ஏ.

சபாநாயகருக்கு எதிராக திமுக கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தில் ஒ.பன்னீர்செல்வம் அணி எம்.எல்.ஏ.நட்ராஜ் சபாநாயகருக்கு ஆதரவாக வாக்களித்தார்.


 

 
சட்டசபையில் இன்று சட்டப்பேரவையில் இன்று சபாநாயருக்கு எதிராக திமுக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை கொண்டுவந்தது. தீர்மானம் குரல்வாக்கெடுப்பு முறையில் நடைபெற்றது. 
 
திமுக எம்.எல்.ஏ.க்கள் ஆதரவாக வாக்களித்தனர் அளித்தனர். அதிமுக எம்.எல்.ஏ.க்கள் எதிராக வாக்களித்தனர். இதில் ஓபிஎஸ் அணி எம்.எல்.ஏ.க்கள் இந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தை புறக்கணித்தனர். சபாநாயகருக்கு ஆதரவு அதிக அளிவில் இருந்ததால். திமுக தோல்வி அடைந்தது.
 
ஓபிஎஸ் அணி எம்.எல்.ஏ.க்கள் இந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தை புறக்கணித்த நிலையில் எம்.எல்.ஏ.நட்ராஜ் மட்டும் தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தார்.