செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 5 ஜூன் 2021 (15:37 IST)

ஆசிரியர்கள் 20ம் தேதிக்குள் தடுப்பூசி போட வேண்டும்! – பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் 20ம் தேதிக்கு தடுப்பூசி போட்டுக் கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா காரணமாக ஆண்டு கணக்கில் பள்ளிகள் திறக்கப்படாமல் உள்ளது. தற்போதைய கொரோனா இரண்டாம் அலை அதிகரித்துள்ள நிலையில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ள பள்ளிக்கல்வித்துறை தமிழகத்தில் அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் ஜூன் 20க்கும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என கூறப்பட்டுள்ளது.