சென்னை, பச்சையப்பன் கல்லூரி மாணவர்களிடையே மோதல்.. ஒரு மாணவருக்கு அரிவாள் வெட்டு..!
சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டதை அடுத்து ஒரு மாணவருக்கு அரிவாள் வெட்டு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுக்கும் பிற கல்லூரி மாணவர்களுக்கும் இடையே அவ்வப்போது மோதல் ஏற்படும் என்றும் குறிப்பாக பிரசிடென்சி கல்லூரி மாணவர்களுக்கும் பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுக்கும் பலமுறை மோதல் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
இந்த நிலையில் இன்று பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுக்கிடையே திடீர் மோதல் ஏற்பட்டதாகவும் இந்த மோதலில் மாணவர் ஒருவருக்கு அரிவாள் வெட்டு விழுந்ததாகவும் கூறப்படுகிறது.
இது குறித்த தகவல் காவல்துறைக்கு வந்த நிலையில் உடனடியாக கீழ்பாக்கம் போலீசார் பச்சையப்பன் கல்லூரிக்கு சென்று மோதலை தடுத்ததாகவும் மாணவர்களை சமாதானப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.
மேலும் போலீசார் சில மாணவர்களிடம் விசாரணை செய்து வருவதாகவும் மோதலுக்கு யார் காரணம் என்பது குறித்து விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் அறிவாள் வெட்டு போன்ற சம்பவத்தில் ஈடுபடுவது வருந்தத்தக்கது என சமூக நல ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Edited by Mahendran