வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 28 மார்ச் 2024 (19:12 IST)

ஜம்மு-காஷ்மீருக்கு நடந்தது தமிழ்நாட்டுக்கும் நடக்கலாம்: ப.சிதம்பரம் எச்சரிக்கை..!

ஜம்மு காஷ்மீருக்கு நடந்தது தமிழ்நாட்டிற்கும் நடக்கலாம் என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப சிதம்பரம் எச்சரிக்கை விடுத்துள்ளார்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இரண்டாக பிரித்தது போல் தமிழ்நாட்டையும் பிரிக்க சதி நடந்து கொண்டிருப்பதாகவும் ஜம்மு காஷ்மீரை பிரித்தது போல் தமிழ்நாட்டையும் பிரிக்கலாம் என்றும் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாடு பிரிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் அவர் கூறினார்

இந்தியா கூட்டணி வெல்லாவிட்டால் ஜனநாயகம் மெல்ல சாகும் என்றும் ஜனநாயகத்தை அரசியல் சாசனத்தை நலிந்த மக்கள் ஏழை மக்கள் கொடுக்கப்பட்ட மக்களுக்கான சுதந்திர உரிமைகளை பாதுகாக்க கை சின்னத்தில் வாக்களியுங்கள் என்றும் அவர் தேர்தல் பிரச்சாரத்தில் தெரிவித்தார்

 சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் மீண்டும் சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரம் போட்டியிடும் நிலையில் அவருக்காக ப சிதம்பரம் தீவிர தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Mahendran