1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Updated : செவ்வாய், 4 ஏப்ரல் 2017 (12:21 IST)

வைகோவுக்கு துணையாக ஜெயிலுக்கு போவது யார் தெரியுமா?: எச்.ராஜா அதிரடி!

வைகோவுக்கு துணையாக ஜெயிலுக்கு போவது யார் தெரியுமா?: எச்.ராஜா அதிரடி!

ஏர்செல் - மேக்சிஸ் வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் பா.சிதம்பரம் கைதாகி ஜெயிலுக்கு போவார் என பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


 
 
உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்த ஏர்செல் - மேக்சிஸ் வழக்கின் விசாரணையின் போது சிபிஐ தரப்பில் ஏர்செல் - மேக்சிஸ் ஒப்பந்த முறைகேட்டில் ப.சிதம்பரத்துக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டது.
 
இதனையடுத்து மனுதாரர் சுப்பிரமணியன் சுவாமியின் கோரிக்கையை ஏற்று ஏர்செல் - மேக்சிஸ் விவகாரத்தில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் உள்ளிட்டோருக்கு தொடர்பு உள்ளதாக கூறப்படும் புகார் உள்ளிட்ட அம்சங்கள் மீதான விசாரணை நிலவர அறிக்கையை தாக்கல் செய்ய சிபிஐக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

 
இந்நிலையில் இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, ஏர்செல் - மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரம் கைதாக அதிகப்படியான வாய்ப்புள்ளது. சிறையில் உள்ள வைகோவுக்கு அவர் துணையாக இருப்பார் என குறிப்பிட்டுள்ளார். வைகோ தேச துரோக வழக்கில் 15 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.