வங்கக் கடலில் மேலடுக்கு சுழற்சி: தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு
வங்கக் கடலில் உருவாகியுள்ள மேலடுக்கு சுழற்சியால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை இன்னும் சில தினங்களில் தீவிரமடைந்துள்ளது, வட கர்நாடகத்தில் தீவிரமடைந்துள்ளது. இதனால் கர்நாடகம், ஆந்திரா, கேராளா உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
கேரளாவில் இன்னும் சில தினங்களில் தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்தால் தெற்கு, மேற்கு தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் தமிழகத்தின் மற்ற பகுதிகளில் வெப்ப சலனம் காரணமாக மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மத்திய வங்கக் கடல் பகுதியில் உருவாகியுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக இரண்டு நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.