1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Orange warning to Tamil Nadu

தமிழகத்திற்கு ஆரஞ்ச் நிற எச்சரிக்கை

தமிழகம்
வங்க கடலில் உருவாகியிருக்கும் காற்றழுத்த தாழ்வு காரணமாக தமிழகத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டு உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் வங்கக்கடலில் மூன்றாவது முறையாக காற்றழுத்த தாழ்வு தோன்றியுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வும் மண்டலமாக உருமாறும் என்றும் இதன் காரணமாக நாளை முதல் சனிக்கிழமை வரை தமிழகத்தில் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
மேலும் தமிழகத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்து உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கனமழை பெய்ய கூட என்பதால் அந்த ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் விளக்கம் அளித்துள்ளது
அடுத்த கட்டுரையில்
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் எழுதிய சார்பியல் கோட்பாடு! – ரூ.96 கோடிக்கு ஏலம்!