திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 1 செப்டம்பர் 2021 (09:44 IST)

ஓபிஎஸ் மனைவி மாரடைப்பால் காலமானார்! – அதிர்ச்சியில் அதிமுக!

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி மாரடைப்பால் காலமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக ஒருங்கிணைப்பாளராகவும், தமிழக சட்டசபை துணை எதிர்கட்சி தலைவராகவும் உள்ளவர் ஓ.பன்னீர்செல்வம். இவரது மனைவில் விஜயலட்சுமிக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியானது.

இந்நிலையில் தற்போது விஜயலட்சுமி இறந்துவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் அதிமுகவினரிடம் மட்டுமன்றி, தமிழக அரசியலில் பெரும் அதிர்ச்சியையும், துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.