1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: வெள்ளி, 24 பிப்ரவரி 2017 (15:01 IST)

எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது: ஓபிஎஸ் ஆவேசம்!

எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது: ஓபிஎஸ் ஆவேசம்!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 69-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. ஜெயலலிதா கடந்த டிசம்பர் 5-ஆம் தேதி மரணமடைந்தார். அதன் பின்னர் வரும் முதல் பிறந்த நாள் என்பதால் இது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.


 
 
ஜெயலலிதா கட்டிக்காத்த அதிமுக கட்சி இரண்டாக பிளவுபட்டு நிற்கும் நேரத்தில் அவரது பிறந்தநாள் இரு தரப்பினராலும் கொண்டாடப்படுகிறது. ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அவரது உருவபடத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்து ஜெயலலிதா பிறந்தநாள் மலரை வெளியிட்டு சசிகலா தரப்பினர் கொண்டாடினர்.
 
இதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், பன்ருட்டி ராமச்சந்திரன், தம்பிதுரை அதிமுக அமைச்சர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
 
இந்நிலையில் ஓபிஎஸ் அணியினர் ஓபிஎஸ் வீட்டில் உள்ள ஜெயலலிதா படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி மரியாதை செய்தனர். பின்னர் ஜெயலலிதா போட்டியிட்ட தொகுதியான ஆர்.கே.நகரில் நலத்திட்ட உதவிகளை வழங்கி, அன்னதானம் வழங்கினர்.
 
மேலும் அங்கு பொதுக்கூட்டம் ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் பேசிய முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தற்போது நடந்து வரும் தர்ம யுத்தம் நிச்சயம் வெற்றியடையும், தர்ம யுத்தம் தோல்வியடைந்ததாக சரித்திரமே கிடையாது என்றார். மேலும் இந்த இயக்கத்தை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது, ஒரு குடும்பத்தின் கையில் உள்ள கட்சியை மீட்டெடுப்போம் என சூழுரைத்தார்.