Last Updated : ஞாயிறு, 26 பிப்ரவரி 2017 (13:29 IST)
ஜெ. சிகிச்சை விவகாரத்தில் நான் கூறியதை எவரும் கண்டு கொள்ளவில்லை: ஓபிஎஸ் வேதனை
ஓ.பன்னீர் செல்வம் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், மக்கள் மன நிலைக்கு எதிராக ஒரு ஆட்சியிலும், கட்சியிலும் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது. மக்களின் இந்த அதிருப்தி வருகிற தேர்தலில் எதிரொலிக்கும். புதிதாக பதவியேற்றுள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி எந்த குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இயங்குறார் என்பது மக்கள் அனைவருக்கும் நன்கு தெரியும் என்றார்.
மேலும் அவர் கூறுகையில், ஜெயலலிதா மருத்துவ சிகிச்சையில் மக்களுக்கு சந்தேகம் உள்ளது. சிகிச்சை பற்றி என்னிடம் கூட யாரும் வெளிப்படையாக யாரும் கூறவில்லை. ஜெயலலிதாவுக்கு வெளிநாடுகளில் சிகிச்சையளிக்க வேண்டும் என நான் கூறியும் யாரும் அதை காதில் வாங்கி கொள்ளவில்லை என்று கூறினார்.