அஜித்துக்கு வாழ்த்து கூறிய ஓபிஎஸ்: இதுவும் அட்மினா?

Last Modified புதன், 2 மே 2018 (07:42 IST)
தல அஜித்துக்கு நேற்று திரையுலகினர்கள் பலர் பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவித்த நிலையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களும் தனது டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நடிகர் அஜித்குமார் நல்ல உடல்நலம், மகிழ்ச்சி மற்றும் வெற்றிகளை பெற இந்த பிறந்த நாளில் வாழ்த்துகிறேன் என்றும், அவர் தன்னுடைய துறையில் மென்மேலும் உயர வாழ்த்துக்கள் என்றும் துணைமுதல்வர் ஓபிஎஸ் தனது டுவிட்டரில் கூறியுள்ளார்.

ajith
ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று அஜித்துக்கு தன்னுடைய டுவிட்டரில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துவிட்டு பின்னர் அது தன்னுடைய பதிவு இல்லை என்றும் தனக்கு தெரியாமல் யாரோ செய்த பதிவு என்றும் கூறி வாழ்த்து டுவீட்டை நீக்கிவிட்டார் என்பது தெரிந்ததே
இந்த நிலையில் ஓபிஎஸ் அவர்களின் டுவீட் குறித்து அவர் என்ன கூறவுள்ளார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதுவும் அட்மின் வேலையா? அல்லது ஓபிஎஸ் மனதார வாழ்த்தினாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்


இதில் மேலும் படிக்கவும் :