திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: ஞாயிறு, 30 ஜூலை 2017 (17:03 IST)

கமல்ஹாசனை விட சிறந்த நடிகர் ஓபிஎஸ்: திமுக அதிரடி பதிலடி!

கமல்ஹாசனை விட சிறந்த நடிகர் ஓபிஎஸ்: திமுக அதிரடி பதிலடி!

அதிமுகவின் இரு அணிகளையும் சேர்ந்த எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓபிஎஸ் ஆகியோர் திமுக செயல் தலைவர் ஸ்டாலினை விமர்சித்தும் குற்றச்சாட்டுகளையும் வைத்தனர். இதற்கு திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் பதிலடி கொடுத்துள்ளார்.


 

 
 
நேற்று திருவண்ணாமலையில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, நீர்நிலைகளை மேம்படுத்த அரசு சார்பில் குடிமராமத்துப் பணிகள் நடைபெறுகின்றன. ஆனால் அரசுக்கு நல்ல பெயர் கிடைத்துவிடக் கூடாது என்பதற்காக, ஸ்டாலின் திமுகவினரை கொண்டு கோயில் குளங்களைத் தூர்வாரி வருகிறார்.
 
விவசாயிகளுக்குப் பயன்தரக்கூடிய நீர்நிலைகளைத் தூர்வாராமல், சைதாப்பேட்டை கோயில் குளத்தை ஏன் தூர்வார வேண்டும். புண்ணியம் தேடுவதற்காகவே ஸ்டாலின் கோயில் குளங்களில் தூர்வாரும் பணியைச் செய்து வருகிறார் என்றார்.
 
மேலும் ஓபிஎஸ் பேசியபோது, அதிமுக தொண்டர்களையும், மக்களையும் தன் பக்கம் கவர்வதற்காக ஸ்டாலின் நாடகமாடுகிறார். திமுக ஆட்சியில் இருந்தபோது, காவிரி, முல்லைப் பெரியாறு விவகாரங்களில் ஸ்டாலின் தனது கடமையைச் செய்யவில்லை என கூறினார்.
 
இதற்கு இன்று பதிலளித்த திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், ஸ்டாலின் மீதான குற்றச்சாட்டு எடப்பாடி பழனிசாமியின் அறியாமையை வெளிப்படுத்துவதாக உள்ளது. மேலும் ஓபிஎஸ் நடிகர்கள் சிவாஜி கணேசன் மற்றும் கமல்ஹாசன் ஆகியோரைவிட சிறப்பாக நடித்து வருகிறார் என கூறினார்.