1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: வெள்ளி, 24 பிப்ரவரி 2017 (16:14 IST)

ஏமாற்றிய ஓபிஎஸ்: உசுப்பேற்றிவிட்ட மாஃபா பாண்டியராஜன்!

ஏமாற்றிய ஓபிஎஸ்: உசுப்பேற்றிவிட்ட மாஃபா பாண்டியராஜன்!

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 69-வது பிறந்த நாளான இன்று அதிமுகவின் சசிகாலா அணி, ஓபிஎஸ் அணி என இரண்டு அணியினரும் தமிழகம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளனர்.


 
 
குறிப்பாக இன்று முதல் ஓபிஎஸ் மக்களை நோக்கி நீதி கேட்டு பயணம் செல்ல இருப்பதாக கூறப்பட்டது. இதன் தொடக்கமாக இன்று ஆர்.கே.நகரில் நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைத்து பொதுக்கூட்டம் ஒன்றுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது.
 
இந்நிலையில் இந்த நிகழ்ச்சி நடக்கும் முன்னர் இது குறித்து ஓபிஎஸ் அணியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் செய்தியாளர்களிடம் பேசிய போது தமிழக அரசியல் வரலாற்றை மாற்றியமைக்கும பல விஷயங்களை ஓபிஎஸ் பேசயிருக்கிறார் என கூறினார்.
 
இதனால் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது, குறிப்பாக அப்பல்லோவில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டு மரணமடைந்த மர்மம் குறித்து பேசுப்போவதாக தகவல் வந்தது. இதனால் இது சசிகலா தரப்புக்கு பெரும் சிக்கலை உருவாக்கும் என அதிமுகவினர் பேச ஆரம்பித்தனர்.
 
ஆனால் ஆர்.கே.நகர் பொதுக்கூட்டத்தில் பேசிய ஓபிஎஸ் புதிதாக எதையும் பேசவில்லை. வழக்கம் போல ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருக்கிறது. அது தொடர்பாக நீதி விசாரணை நடத்தும் வரை தர்ம யுத்தம் தொடரும் என கூறினார். இதனால் புதிதாக ஓபிஎஸ் எதாவது சொல்வார் என எதிர்பார்த்த அதிமுக தொண்டர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.