வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 26 டிசம்பர் 2018 (09:23 IST)

15,000 பெண்களுக்கு பிரசவம் பார்த்த மூதாட்டி மரணம்

கர்நாடகாவில் 15,000 பெண்களுக்கு பிரசவம் பார்த்த மூதாட்டி வயது மூப்பினால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் கிருஷ்ணபுரா கிராமத்தை சேர்ந்தவர் சுலகிட்டி நரசம்மா(98). 1920ம் ஆண்டு பிறந்த இவர் தனது வாழ்நாளில் 15 ஆயிரம் பெண்களுக்கு மேல் பிரசவம் பார்த்துள்ளார். இதனை தனது பாட்டியிடம் இருந்து கற்றுக்கொண்டதாக அவர் கூறுவார். பிரசவம் பார்ப்பதற்கு இவர் கட்டணம் ஏதும் பெறுவதில்லை. இவரின் சேவையை கவுரவிக்கும் விதத்தில் நரசம்மாவுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வயது மூப்பினால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இவரது மறைவிற்கு கர்நாடக மாநில முதல்வர் குமாரசாமி உட்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், சினிமா பிரபலங்களும், பொதுமக்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.