1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 27 அக்டோபர் 2021 (17:10 IST)

டிடிவி தினகரன் மகள் திருமண வரவேற்பில் ஓபிஎஸ் சகோதரர்!

டிடிவி தினகரன் மகள் திருமண வரவேற்பில் ஓபிஎஸ் சகோதரர்!
சமீபத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் அதிமுகவில் சசிகலாவை இணைப்பது குறித்து ஆலோசனை நடந்து வருவதாக கூறிய நிலையில் டிடிவி தினகரனின் மகள் திருமண வரவேற்பில் ஓபிஎஸ் சகோதரர் கலந்து கொண்டிருப்பதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
டிடிஎஸ் தினகரன் அவர்களின் மகள் திருமணம் சமீபத்தில் நடந்த நிலையில் அவருடைய திருமண வரவேற்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஓபிஎஸ் சகோதரர் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். இந்த நிகழ்வு சசிகலாவுடன் ஓபிஎஸ் நெருங்கி வருகிறார் என்பதற்கு சான்றாக உள்ளது என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்
 
சசிகலாவை அதிமுகவில் இணைப்பது குறித்து ஈபிஎஸ் அணியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் ஓபிஎஸ் அணியினர் சசிகலா அதிமுகவில் இணைக்க முயற்சித்து வருவதாக கூறப்படுவதால் அதிமுக இரண்டாக உடையும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது