வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 15 பிப்ரவரி 2023 (10:01 IST)

பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம்: ஓபிஎஸ் அறிவிப்பு..!

ops
பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெறும் என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 
 
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமை கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட கழக செயலாளர் ஆலோசனை கூட்டம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெறும். 
 
சென்னை எழும்பூர் பாந்தியன் சாலையில் உள்ள அசோகா ஹோட்டலில் பிப்ரவரி 20ஆம் தேதி திங்கட்கிழமை மாலை 4 மணிக்கு ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்த கூட்டத்தில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் குறித்து ஆலோசனை செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
 
Edited by Siva