1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 8 ஆகஸ்ட் 2022 (13:10 IST)

கடும் எதிர்ப்புகளுக்கு இடையே மின்சார சட்டத்திருத்த மசோதா தாக்கல்!

parliament
கடும் எதிர்ப்புகளுக்கு இடையே மக்களவையில் மின்சார சட்டத் திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்கள் மின்சார சட்டத் திருத்த மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் மக்களவையில் மின்சாரத்துறை அமைச்சர் ஆர்கே சிங் இன்று இந்த மசோதாவை தாக்கல் செய்தார்
 
காங்கிரஸ், திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் அறிமுக நிலையிலேயே இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தன என்பதும் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டால் மாநிலங்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்று கூறி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.,
 
குறிப்பாக மின்சார விநியோகத்தை தனியாருக்கு விடுவது மின்சார ஒழுங்குமுறை ஆணையங்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்க சட்ட திருத்தம் செய்வது ஆகியவை எதிர்கட்சிகளின் எதிர்ப்பு காரணமாக உள்ளது
 
இந்த நிலையில் கடும் எதிர்ப்புகளையும் மீறி மின்சார சட்டத் திருத்த மசோதாவை நாடாளுமன்ற நிலைக்குழு மத்திய அரசுக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன