செவ்வாய், 18 ஜூன் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 24 ஆகஸ்ட் 2021 (19:24 IST)

புதுச்சேரியில் கொரோனாவுக்கு ஒரே ஒருவர் பலி!

கொரோனா வைரஸ் பாதிப்புக்கு எதிராக புதுச்சேரி அரசு எடுத்த நடவடிக்கைகளின் காரணமாக மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் பலியானவர்களின் எண்ணிக்கையை வெகுவாக குறைந்துள்ளது 
 
புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் கொரோனாவுக்கு ஒரே ஒருவர் மட்டுமே பலியானதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் 73 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது 
 
மேலும் கொரோனாவால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1809 என்றும் 103 பேர் இன்று மட்டும் குணமாகி வீடு திரும்பியுள்ளதாக இவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 433 என்றும் புதுவை அரசு தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
மேலும் புதுவையில் இதுவரை 7 லட்சத்து 85 ஆயிரத்து 656 பேருக்கு (2வது தவணை உள்பட) தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்றும் புதுவை அரசு தெரிவித்துள்ளது.